முன்னாள் சோவியத் உளவாளியாக இருந்த புதின் புகைப்படம்


முன்னாள் சோவியத் உளவாளியாக  இருந்த புதின் புகைப்படம்
x
தினத்தந்தி 13 Dec 2018 6:08 AM GMT (Updated: 13 Dec 2018 6:08 AM GMT)

முன்னாள் சோவியத் உளவாளியாக இருந்த புதின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு ஜெர்மனியில் முன்னாள் சோவியத் உளவாளியாக இருந்தபோது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்திய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிரெஸ்டென்-யில் உள்ள ஸ்டாசி ரகசிய போலீஸ்  காப்பகத்தில் இந்த அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டில் கேஜிபியில் பதவி பெற்றார். அது அவருக்கு ஸ்டாசி  வசதிகளுடன் கிடைத்தது. ஸ்டாசி ரெக்கார்ட்ஸ் ஏஜென்சி இதுகுறித்து கூறியதாவது, தனது பணியை நிறைவேற்றிக்கொள்வதற்காக அவருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது என விளக்கமளித்துள்ளது.

ஸ்டாசி  என்பது கிழக்கு ஜெர்மனிய  பாதுகாப்பு அமைச்சகத்தின் புனைப்பெயர் ஆகும். சாதாரண குடிமக்கள் பற்றிய அதன் கண்காணிப்புக்கு இது மிகவும் புகழ் பெற்றது. அவர்களில் பலர் ஒருவருக்கொருவர் உளவு  பார்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story