ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது


ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது
x
தினத்தந்தி 13 Dec 2018 6:26 AM GMT (Updated: 13 Dec 2018 6:26 AM GMT)

ஜெர்மனில் ஒரு டன் எடையுள்ள திரவ சாக்லெட் சாலையில் ஆறாக ஓடி கட்டியாக மாறியது.

ஜெர்மனில் வெஸ்டான்னேன் என்னும் இடத்தில் ட்ரேமேய்ஸ்டெர் என்னும் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையில், திரவ சாக்லேட் ஊற்றி வைத்திருக்கும் பிரமாண்டமான டேங்க் திடீரென உடைந்துள்ளது. குளிர் காரணமாக, சில நிமிடங்களில் திரவ சாக்லெட் இறுகிக் கட்டியாக ஆனதால், அங்கு வாகனங்கள் செல்ல வழியின்றி அந்தச் சாலை மூடப்பட்டது.

25 தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சேர்ந்து மண்வெட்டி, சுடுநீர், நெருப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி, மிகுந்த சிரமத்துடன் சாக்லெட்டை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

இந்நிலையில், சாலையில் கொட்டிய ஒரு டன் சாக்லெட்டினால், அதன் தயாரிப்பு எதுவும் பாதிக்கப்படாது எனவும், இரண்டு தினங்களில் மீண்டும் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிடும் என்றும் ட்ரேமேய்ஸ்டெர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

Next Story