உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 13 Dec 2018 11:00 PM GMT (Updated: 13 Dec 2018 5:23 PM GMT)

* அகதிகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் நட்பு ரீதியான ஆலோசனை நடத்தியதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ராடர் தெரிவித்தார்.

* சீனாவில் கனடா நாட்டை சேர்ந்த முன்னாள் தூதர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட குற்றச்சாட்டில் கனடா நாட்டு வர்த்தக ஆலோசகர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பேச்சாற்றல் மற்றும் கணிக்க முடியாத குணாதிசயத்தால் தனக்கு ஐக்கிய நாடுகள் சபையில் கவுரவமிக்க பதவி கிடைத்ததாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறினார். 

* கம்போடியாவில் தடைவிதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மீண்டும் அரசியலில் இணையும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுபடையில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி அமெரிக்க செனட் சபையில் விவாதிக்கப்பட உள்ளது. 

* வியட்நாமின் மத்திய பகுதியில் அமைந்துள்ள 5 மாகாணங்களில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 13 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* பாலஸ்தீன வாலிபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.


Next Story