இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்ணுக்கு 4 ஆண்டு ஜெயில் : புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி


இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்ணுக்கு 4 ஆண்டு ஜெயில் : புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி
x
தினத்தந்தி 16 Dec 2018 12:00 AM GMT (Updated: 15 Dec 2018 7:27 PM GMT)

இங்கிலாந்து நாட்டில் உள்ள லாக்பாரோக் நகரில் வசித்து வந்தவர் ஜாஸ்மின் மிஸ்திரி (வயது 36). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் 2013–ம் ஆண்டு அப்போதைய அவரது கணவர் விஜய் கடெச்சியாவிடம் தனக்கு மூளை புற்றுநோய் இருப்பதாக கூறினர்.

லண்டன்,

ஜாஸ்மின் மிஸ்திரி  இதுதொடர்பாக தனது டாக்டர் வாட்ஸ்–அப்பில் அனுப்பியதாக ஒரு தகவலையும், ஒரு ஸ்கேன் படத்தையும் காண்பித்தார். இதற்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்ய ரூ.4½ கோடி (இந்திய மதிப்பில்) வரை செலவாகும் என்று கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பலருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் அனுப்பினார்.

இதில் அவருக்கு 2 ஆண்டுகளில் நன்கொடையாக ரூ.2¼ கோடிக்கு மேல் கிடைத்தது. பின்னர் ஜாஸ்மினின் முன்னாள் கணவர் விஜய்க்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது. ஜாஸ்மின் மூளை ஸ்கேன் படத்தை தனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் காண்பித்தார். இதில் அந்த படம் கூகுள் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது என தெரிந்தது. அவரது புகாரின்பேரில் கடந்த ஆண்டு போலீசார் ஜாஸ்மினை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் கோர்ட்டு ஜாஸ்மினுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.


Next Story