உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 9:18 PM GMT)

ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது.


* பிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த 11-ந் தேதி ஷெரீப் என்கிற ஐ.எஸ். பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த 2 நாட்களுக்கு பிறகு ஷெரீப் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த தாக்குதலில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலந்து நாட்டுக்காரர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

* ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

* ஜிம்பாப்வே நாட்டில் நியாம்பாண்டா மாகாணத்தில் 2 மினி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* லெபனான் நாட்டில் அரசு நிதியை தனியார் வங்கிகளுக்கு வழங்கியதாக கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் பெய்ரூட்டில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி அரசை அதிர வைத்தனர்.

* கிரீஸ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

* இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் மகன் யேர் நேட்டன்யாஹூ. இவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டதை தொடர்ந்து, ‘பேஸ்புக்’ நிறுவனம் அவரது கணக்கை தற்காலிகமாக முடக்கியது.


Next Story