உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 18 Dec 2018 10:15 PM GMT (Updated: 18 Dec 2018 8:40 PM GMT)

வெளிநாடுகளில் அகதிகளாக வசித்து வந்த சிரிய நாட்டினர் 704 பேர் மீண்டும் தாய்நாடு திரும்பினர்


* ஆப்கானிஸ்தானில் பார்யாப் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை குறிவைத்து ஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தலீபான் நீதிபதி ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதேபோன்று காந்தஹார் மாகாணத்தில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 36 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

* நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் துள்சி கிரி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

* வெளிநாடுகளில் அகதிகளாக வசித்து வந்த சிரிய நாட்டினர் 704 பேர் மீண்டும் தாய்நாடு திரும்பினர்.

* “சிரிய நாட்டின் அதிபராக பஷார் அல் ஆசாத் தொடர்வதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அந்த நாட்டின் அரசு தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டுக்கு மறுகட்டமைப்புக்கான நிதி வழங்கப்பட மாட்டாது” என அமெரிக்கா அறிவித்துள்ளது.

* லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் தொடர்ந்து தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக ஐ.நா. ஆதரவு பெற்ற அந்த நாட்டின் அரசு கூறி உள்ளது.

* ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலீபான் இயக்கத்தினருக்கும் இடையேயான நேரடி பேச்சு வார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இதற்காக தன்னால் இயன்ற அத்தனையும் செய்யப்படும் எனவும் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.


Next Story