லண்டன் கட்விக் விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு


லண்டன் கட்விக் விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 11:27 AM IST (Updated: 20 Dec 2018 1:03 PM IST)
t-max-icont-min-icon

ஆளில்லா விமான குறுக்கீடால் லண்டன் கட்விக் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

காட்விக், 

இங்கிலாந்தில் பரபரப்பு மிக்க  விமான நிலையங்களில் இரண்டாவது இடம் வகிப்பது காட்விக் விமான நிலையம்.  இந்த விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட தயராக இருந்த நிலையில், திடீரென ஆளில்லா விமானங்கள் விமானம் செல்லும் வான்பரப்பில் தென்பட்டது. 

இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக விமான புறப்பாடு மற்றும் வருகை தற்காலிகமாக ஐந்து மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.  இதனால், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.  

விமான சேவை தற்காலிகமாக முடங்கியதால், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு  மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள காட்விக் விமான நிலைய நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்புக்கே நாங்கள் அதிக முன்னுரிமை அளிப்போம் என்று தெரிவித்தது. 

சமீப காலமாக, வணிக ரீதியில் இயக்கப்படும் விமானங்களுக்கு இடையூறாக ஆளில்லா விமானங்களை இயக்கும் நிகழ்வுகள் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 92 சம்பவங்கள் இதுபோல நடைபெற்றுள்ளன. விமான சேவை எப்போதும் மீண்டும் தொடங்கப்படும் என்பது பற்றி தெளிவான எந்த விவரத்தையும் கட்விக் விமான நிலையம் வெளியிடவில்லை.
1 More update

Next Story