ஆப்கானில் நூலகம் அமைப்பதில் யாருக்கு பயன்? கேலி செய்த டிரம்ப்க்கு இந்தியா பதிலடி


ஆப்கானில் நூலகம் அமைப்பதில் யாருக்கு பயன்? கேலி செய்த டிரம்ப்க்கு இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 3 Jan 2019 2:01 PM GMT (Updated: 3 Jan 2019 2:01 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா நூலகம் கட்டிக்கொடுப்பது குறித்து கேலி செய்த டொனால்டு டிரம்பிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதால் சின்னாப்பின்னமாகிய ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிக்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்கிறது.
 
அமெரிக்க மத்திரிசபை கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடி என்னிடம் தொடர்ந்து கூறுவது  ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவது பற்றி தான். நூலகமா? ஆப்கானிஸ்தானில் நூலகத்தை யார் பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. இதனால் பலன் ஒன்றும் இல்லை. ஆனால் இந்தியா அங்கு செயல்படுத்துவதில் இதுவும் ஒன்று, இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை என்று கேலியாக பேசிய டொனால்டு டிரம்ப்,  இந்தியா ஏன் ஆப்கானிஸ்தானுக்கு தலீபான்களை எதிர்த்து போராட வீரர்களை அனுப்பவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா நூலகம் கட்டிக்கொடுப்பது குறித்து கேலி செய்த டொனால்டு டிரம்பிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும் உலக நாடுகளின் பணி முடிந்து விடவில்லை.  அங்கு பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை இந்தியா செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், பாசனம், குடிநீர் உள்பட 116 சமுதாய மேம்பாட்டு திட்டங்களுடன், பல பெரிய கட்டமைப்பு பணிகளையும் இந்தியா செய்துவருகிறது.

இது அந்நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் உதவியாக இருக்கும். சிறு நூலகங்களை கட்டினாலும், 218 கி.மீ. சாலை, அணை, நாடாளுமன்ற கட்டிடம் என பல பெரிய கட்டமைப்பு பணிகளில் தான் இந்தியா முக்கியத்துவம் செலுத்துகிறது என பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story