உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 9:14 PM GMT)

ஈராக்கின் சாலஹுதின் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்தில் உள்ள ஒரு கிராமத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சூறையாடினர்.

* மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசின் வடக்கு பகுதியில் உள்ள டெலா நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிர் இழந்தனர். இது அங்கு கடந்த 6 நாட்களில் நடந்த 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தோனேசியாவின் வடக்கு மளுக்கு மாகாணத்தில் உள்ள ஹலமாஹீரா நகரில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தெரியவில்லை.

* ஈராக்கின் சாலஹுதின் மாகாணத்தின் தலைநகரான திக்ரித்தில் உள்ள ஒரு கிராமத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சூறையாடினர். மேலும் கிராம மக்கள் 5 பேரை அவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

* அல்-அஜிசியா உருக் காலை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி நவாஸ் ஷெரீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

* வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கிறிஸ்டியன் ஷெர்பா அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலகிலேயே முதல் முறையாக, கார் டிரைவர்கள், பயணத்தின் போது செல்போன் பயன்படுத்துவதை கண்டறியும் பிரத்தியேக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் 11 ஆயிரம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story