உலகைச் சுற்றி...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
* தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள தெப்ஹா மாவட்டத்தில் சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நின்றுகொண்டிருந்த ஜீப்பை ரோந்து போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
* சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஜிசெங் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் முன்னாள் காவலாளி, நேற்று அந்த பள்ளிக்குள் புகுந்து சுத்தியல் போன்ற ஒரு ஆயுதத்தை கொண்டு மாணவர்களை சரமாரியாக தாக்கினார். இதில் 20 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
* ஆப்கானிஸ்தானின் காஸ் உர்ஸ்கான் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆப்கான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 35 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் 10 வாகனங்கள் நிர்மூலமாக்கப்பட்டன.
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சீனாவில் கைது செய்யப்பட்டிருக்கும் கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
* மங்கோலியா நாட்டின் தலைநகர் உலன் பதாரில் இருந்து 45 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற பஸ் ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். 31 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related Tags :
Next Story