வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த மாடல் அழகி உதடு கின்னஸ் சாதனை


வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த மாடல் அழகி உதடு கின்னஸ் சாதனை
x
தினத்தந்தி 9 Jan 2019 6:52 AM GMT (Updated: 9 Jan 2019 6:52 AM GMT)

வைரம் பதிக்கப்பட்ட உலகின் மிக விலை உயர்ந்த வைரம் பதித்த லிப் ஆர்ட் செய்து வைர நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.

சிட்னி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரோசன் டோரோப் டைமண்ட் நிறுவனம் தங்களது 50 வது ஆண்டை முன்னிட்டு கின்னஸ் சாதனை ஒன்றை  நடத்தியுள்ளது.

1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் வைர நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 50 வது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மேக்அப் ஆர்டிஸ்ட் க்ளார் மாக் உதடுகளில் வைரங்களை பதித்து அசத்தியுள்ளார்.

ஒவ்வொன்றும் மதிப்பு மிக்க வைரம் என்பதால் மிகத் தெளிவுடனும் கவனமுடனும் இந்த ஆர்ட்டைச் செய்துள்ளார். லிப் ஆர்ட்டில் மொத்தம் 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 காரட் ஆகும். மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகள் தான் வைரத்தில் வடிவமைக்கப்பட்டன. முதலில் உதட்டில் கருப்பு நிற மாட் லிப்ஸ்டிக்கைப் அப்ளை செய்துள்ளார்.

பின் பால்ஸ் ஐலாஷ் ஒட்டக்கூடிய பிசின் பயன்படுத்தி வைரங்களை உதடுகளில் ஒட்டியுள்ளார். இந்த லிப் ஆர்ட் முழுமை பெற இரண்டரை மணி நேரம் ஆகியதாம். மிகவும் பெருமையாக உணர்கிறேன். பல மணி நேர ஆராய்ச்சிகள், வடிவமைப்புகள், திட்டமிடல்கள் என நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது.

அவ்வாறு செயல்பட்டதனால்தான் விலை மதிப்பில்லாத இந்த சாதனைக் கிடைத்துள்ளது. இதைத்தவிர வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும் என மனம் நிறைந்து பேசியுள்ளார். இதுகுறித்து ரோசன் டோரோப்  நிறுவனம் கூறிய போது, பல வழிமுறைகளைப் பின்பற்றி இதைச் செய்ய வேண்டும். அதனால் கவனமுடன் கையாண்டதுதான் மிகவும் நெருக்கடியாக இருந்தது. இருப்பினும் உலக சாதனையைப் பெற்றதில் மகிழ்ச்சியே என கூறியுள்ளார்.

Next Story