உலக செய்திகள்

வேற்றுகிரகவாசிகளிடம் 2-வது சிக்னல்: 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் + "||" + Mysterious Repeating Signals Have Been Detected Coming From Space For The Second Time

வேற்றுகிரகவாசிகளிடம் 2-வது சிக்னல்: 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்

வேற்றுகிரகவாசிகளிடம் 2-வது சிக்னல்: 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து  வந்த ரேடியோ சிக்னல்
வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பூமிக்கு கிடைத்த 2-வது சிக்னல் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பி உள்ளனர்.
150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் முன்னணி நிபுணர்கள் இது வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ள ஏற்ற நேரம் என தெரிவித்து உள்ளனர்.அதற்கான செயல்பாடுகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்ஸ், கனடா  மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப தொலை நோக்கி கருவிகளை  பொருத்தி விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். பிரபஞ்சத்தில் இருந்து வரும் வினோதமான சமிக்ஞைகளை தொகுத்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலையில் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து  வந்த ஒரு சமிக்ஞையை ஆய்வு செய்து வருகின்றனர். ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து  இந்த சமிக்ஞை கிடைத்து உள்ளது .

தற்போது 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து ரேடியோ சிக்னல் கிடைத்து உள்ளது  இந்த சிக்னல் நட்சத்திர கூட்டத்தின் நடுவே இருந்து வந்துள்ளது. இது வேற்றுகிரகவாசிகள்  ஸ்பேஸ்ஷிப்பில் இருந்து சிக்னல் வந்துள்ளது.

பூமிக்கு கிடைத்துள்ள அந்த சிக்னல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அது எந்த மாதிரியான சிக்னல் என்றும் கணிக்க முடியவில்லை. இதை டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13 ரேடியோ வேக அதிர்வுகளில் இருந்து ஒரு அசாதாரமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்ப திரும்ப வந்தது.

ஒரு விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக் கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது என்று  கண்டறியப்பட்டுள்ளது.

ஓரே இடத்தில் இருந்து வந்த ரேடியோ வேக அதிர்வுகள் திரும்ப திரும்ப வரும் நிகழ்வு முன்பு ஒரு முறை நடந்துள்ளது. இதை வேறொரு டெலஸ்கோப் உதவியுடன்  சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மகாணத்தில் ஓகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் தொலை நோக்கி  இதை கண்டுபிடித்துள்ளது.

இந்த வான் தொலை நோக்கியில்  கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளை கண்டுபிடித்தது. ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றது.

சுருக்கமாக எப்ஆர்பி என்று அழைக்கப்படும் ரேடியோ வேக அதிர்வுகள் என்பது விண்வெளியில் தோன்றும் மில்லி செகண்ட் நீளமே பிரகாசமான பிளாஷ் போன்ற ஒளி.

இதுவரை விஞ்ஞானிகள் 60 முறை இத்தகைய ஒற்றை ரேடியோ வேக அதிர்வுகளை கண்டுள்ளனர். திரும்பத் திரும்ப ஒளிரும், மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளை காண்பது இது இரண்டாவது முறை.

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரீஹர்ஷ் தெண்டுகல்கர்  இரண்டு முறை மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளின் பண்புகளும் ஒத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். 

இது வேற்றுகிரகவாசிகளின் ஸ்பேஸ்ஷிப் இருந்து புறப்படும் போது உண்டாகிய ஒளியாக இருக்கலாம் என்று வானியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரேடியோ வேக அதிர்வுகள் எதனால் தோன்றுகின்றன என்பதற்குப் பல காரணங்கள் கணிக்கப்படுகின்றன. மிக வலுவான காந்தப் புலம் உடைய, வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் இத்தகைய வலுவான சமிக்ஞைகள் தோன்றலாம் என்றும் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசிய தகவல்களை கண்டறிந்த சீன விண்கலம்
நிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்களை பற்றிய தகவல்களை முதன்முறையாக சீன விண்கலம் கண்டறிந்துள்ளது.
2. குளிர்ச்சியில் இருந்து மின்சாரம் விஞ்ஞானிகள் சாதனை
குளிர்ச்சியில் இருந்து மின்சாரம் எடுத்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்து உள்ளனர்.
3. கருந்துளை படம் முதல் முறையாக வெளியிடபட்டது
விண்வெளி ஆய்வாளர்களால் கருந்துளையின் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
4. நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்
சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25-ந் தேதிக்குள் அணுக நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.
5. பூமிக்கு வந்து சென்றது வேற்றுகிரகவாசிகள் விமானம் தான் விஞ்ஞானிகள் உறுதி
ரகசியமாக பூமிக்கு வந்து சென்றது வேற்றுகிரகவாசிகள் விமானம் தான் என விஞ்ஞானிகள் 95 சதவீதம் உறுதியாக கூறியுள்ளனர்.