வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும்: தென்கொரியா விருப்பம்


வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும்: தென்கொரியா விருப்பம்
x
தினத்தந்தி 11 Jan 2019 3:23 AM GMT (Updated: 11 Jan 2019 3:23 AM GMT)

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

சியோல், 

வடகொரியாவுடன் மீண்டும் பொருளாதார ஒத்துழைப்பை துவங்க அந்நாடு மீதான பொருளாதார தடையில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.  தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இது குறித்து கூறியிருப்பதாவது:-

அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை வட கொரியா இன்னும் உறுதியாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும்.

வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால்தான், அந்த நாட்டுடன் தென் கொரியா வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள முடியும்.எனவே, அந்தப் பொருளாதாரத் தடைகளை விலக்குவது குறித்து அமெரிக்காவிடம் பேசுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story