உலக செய்திகள்

பாரீசில் பேக்கரியில் பயங்கர விபத்து: 20 பேர் காயம் என தகவல் + "||" + Several injured in powerful blast at Paris bakery: police

பாரீசில் பேக்கரியில் பயங்கர விபத்து: 20 பேர் காயம் என தகவல்

பாரீசில் பேக்கரியில் பயங்கர விபத்து: 20 பேர் காயம் என தகவல்
பாரீசில் பேக்கரியில் இருந்த கேஸ் வெடித்து 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரீஸ்,

மத்திய பாரீசில் உள்ள பிரபல பேக்கரியில் கேஸ் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ மளமளவென பரவியது. இதில் அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளாக போலீசார் தெரிவித்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.