உலக செய்திகள்

ஈகுவடார் நாட்டில் தீ விபத்தில் 18 பேர் பலி + "||" + 18 people killed in fire in Ecuador

ஈகுவடார் நாட்டில் தீ விபத்தில் 18 பேர் பலி

ஈகுவடார் நாட்டில் தீ விபத்தில் 18 பேர் பலி
ஈகுவடார் நாட்டில் நடந்த தீ விபத்தில் 18 பேர் பலியாயினர்.
குயிட்டோ, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் உள்ள குவாயாகுவில் நகரில் உள்ள மதுபோதை மீட்பு மையத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாயினர்.

இவர்களில் பெரும்பாலானோர் மதுபோதைக்கு அடிமையாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு இவர்கள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து மதுபோதை மீட்பு மையத்தினர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.