உளவுத்துறைக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் இந்தியர்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை எம்.பி.யாக இருப்பவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் டெல்லியில் பிறந்தவர்.
வாஷிங்டன்,
ராஜா கிருஷ்ணமூர்த்தி ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இல்லினாய்ஸ் மாகாணத்தின் 8–வது நாடாளுமன்ற மாவட்ட தொகுதியில் இருந்து இவர் தேர்வு பெற்றவர்.
இவர் உளவுத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் இந்த செல்வாக்கு மிகுந்த பதவிக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





