டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு


டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 7:02 AM GMT (Updated: 19 Jan 2019 7:02 AM GMT)

டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் என்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் போலி பதிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில்  உள்ள மக்கள் புதன்கிழமை காலை ஒரு பெரிய ஆச்சரியத்தில் மூழ்கினர். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதல் பக்கத்தில் 6 கால செய்தியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி விலகியுள்ளார்,  என்று இடம்பெற்று இருந்தது.

அதன்  தலைப்பில் ”எதிர்பாராதது:  டிரம்ப்  வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார்” நெருக்கடி முடிவுக்கு வந்தது  என தனது 6 கால தலைப்பில் தெரிவித்து இருந்தது. அதில் டிரப்பின் 4 கால படம்  அவரது தலை தொங்கி சோகத்தில் இருப்பது போல் இருந்தது.

பத்திரிகையின்  இடது பக்கத்தில், நீண்ட ஒற்றை காலத்தில் அறிக்கை இருந்தது. அதன் தலைப்பில் டிரம்ப் சகாப்தம் முடிவடைகிறது என உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. செய்தித்தாள் மே 1, 2019 என தேதியிடப்பட்டு இருந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வாஷிங்டன் டிசி  இன் நாளிதழ் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள பகுதிகள் உட்பட  இலவசமாக விநியோகிக்கப்பட்டது.

தி வாஷிங்டன் போஸ்ட் அது ஒரு போலி பதிப்பு என்று தெளிவுபடுத்தியதுடன் செய்தித்தாள் எதுவும் நாங்கள் வெளியிடவில்லை என கூறி உள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனம் தனது செய்தியில், வெள்ளை மாளிகையின் ஒரு நடுத்தர வயதிலுள்ள பெண் தனது நிருபரிடம் கூறியதாவது:- "தி வாஷிங்டன் போஸ்ட்டின் இந்த சிறப்பு பதிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள் இது இலவசம், நீங்கள் இதை ஒருபோதும் பெற முடியாது."என கூறியதாக கூறி உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டின் இலவச பதிப்பை விநியோகிக்கும் பெண் வீடியோ ஒன்று யூடியுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், பெண் சொல்வதை கேட்க முடியும்: "ஹாய்! காலை வணக்கம்! பேப்பர் வாங்கினீர்களா? இது ஒரு சிறப்பு பதிப்பு"என கூறுகிறார்.
டிரம்ப் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை உட்பட அரசாங்க அலுவலகங்கள் செயலற்று முடங்கிவிட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக இந்த போலி செய்தித்தாள் வெளியிடப்பட்டு உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டின் போலி பதிப்பின் படி, அந்த செய்தியானது லிசா சுங் என்பவரால் எழுதப்பட்டது. அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 30, 2019 அன்று வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story