உலகளவில் பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரி விகிதங்கள் வியத்தகு முறையில் குறைப்பு -ஆய்வில் தகவல்

உலகளவில் பணக்கார தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரி விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரி விகிதங்கள் வியத்தகு முறையில் குறைப்பு -ஆய்வில் தகவல்
Published on

தாவேஸ்

உலக பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்தர கூட்டத்தின் 5 நாள் கூட்டத்தில் சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையை வெளியிட்டு கூறியதாவது:-

2018 மற்றும் 2022-க்கு இடையில், இந்தியா ஆண்டுக்கு 70 புதிய கோடீசுவரர்களை உருவாக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு 18 புதிய கோடீசுவரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளனர். கோடீசுவரர்களின் மொத்த எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் அவர்களின் செல்வம் முதல் தடவையாக $ 400 பில்லியனை (28 லட்சம் கோடி ரூபாய்) கடந்தது.

இது 2017 ஆம் ஆண்டில் 325.5 பில்லியன் டாலர்களிலிருந்து 2018 ஆம் ஆண்டில் 440.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, இது 2008 உலக நிதிய நெருக்கடிக்குப் பின்னர் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு ஆகும்.

மத்திய, மாநில அரசுகளின் ஆண்டு ஒருங்கிணைந்த வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள், பொது சுகாதாரம் மற்றும் நீர் விநியோகம் ரூ.2,08,166 கோடி, நாட்டின் பணக்காரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 2.8 லட்சம் கோடி.

உலகளவில் பணக்கார தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரி விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியா உட்பட பல நாடுகளிலும், ஒரு கவுரவமான கல்வி அல்லது தரமான சுகாதாரப் பாதுகாப்பு, பணக்காரர்களுக்கு மட்டும் ஆடம்பரமாக மாறியுள்ளது.

இந்தியாவில் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் பணக்கார குடும்ப குழந்தைகளை விட தங்கள் முதல் பிறந்த நாளுக்கு முன் மூன்று மடங்கு அதிகமாக இறக்கிறார்கள் என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com