உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 21 Jan 2019 9:45 PM GMT (Updated: 21 Jan 2019 7:26 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான 2-வது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.


* மாசிடோனியா நாட்டின் பெயரை வடக்கு மாசிடோனியா குடியரசு என மாற்றும் கிரீஸ் அரசின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரரர்கள் கிரீஸ் தலைநகர் ஏதன்சில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.

* இந்தோனேசியாவின் கலிமண்டான் மாகாணத்தில் உள்ள கபுவான் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் ஒருவர் உயிர் இழந்தார். 12 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

* மாலியில் கிடால் பிராந்தியத்தில் உள்ள ஆக்குயில்ஹாக் என்ற இடத்தில் ஐ.நா. அமைதிப்படை வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான 2-வது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியோங் வா மற்றும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

* மெக்சிகோவில் ஹிடால்கோ மாகாணத்தில் எண்ணெய் குழாய் வெடித்து ஏற்பட்ட தீயில் சிக்கி உயிர் இழந்த மேலும் சிலரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 85-ஐ எட்டியது.

* அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, அங்கு அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் செனட் சபை தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story