போப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய செயலி


போப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய செயலி
x
தினத்தந்தி 21 Jan 2019 11:15 PM GMT (Updated: 21 Jan 2019 8:10 PM GMT)

போப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிகன் நகர்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உலக அமைதி வேண்டியும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் நாட்டின் மக்களுக்காகவும் அவ்வப்போது பொது பிரார்த்தனை நடத்துவார். இது போன்ற நிகழ்வுகளின்போது போப் ஆண்டவருடன் இணைந்து தாங்களும் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் விருப்பமாக உள்ளது.

அதே சமயம் நடைமுறையில் இது சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால் தொழில் நுட்ப உதவியின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் தற்போது சாத்தியமாகி உள்ளது.

அதாவது, தன்னுடன் பிரார்த்தனை செய்வதற்காக பிரத்யேகமான புதிய செயலி ஒன்றை போப் ஆண்டவர் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

‘கிளிக் டூ பிரே’ என்கிற அந்த செயலி மூலம் போப் ஆண்டவர் எதற்காக? எப்போது? பிரார்த்தனை செய்யப்போகிறார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள முடியும். எனவே இதன் மூலம் மக்கள் எளிதில் போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியும்.


Next Story