பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து பெண் நீதிபதியாக தேர்வு

பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து மதத்தை சேர்ந்த பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி. இந்து மதத்தை சேர்ந்த இவர் அந்த மாவட்டத்தின் சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தானின் வரலாற்றில் இந்து பெண் ஒருவர் சிவில் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பு ஏற்பது இதுவே முதல் முறையாகும். சிந்து மாகாணத்தின் ஐதராபாத் நகரில் சட்ட பட்டப்படிப்பை முடித்த சுமன் குமாரி, கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
இது குறித்து சுமன் குமாரியின் தந்தையும், கண் மருத்துவருமான பவன் குமார் போதன் கூறுகையில், “என்னுடைய மகள், அவரின் சொந்த மாவட்டத்திலேயே ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என விரும்பினார். தற்போது அது சாத்தியமாகி உள்ளது. அவர் சவாலான துறையை தேர்வு செய்திருக்கிறார் என்பதை அறிவேன். எனினும், எனது மகள் நேர்மையுடன், நீதி தவறாமல் பணியாற்றுவார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
Related Tags :
Next Story






