உலக செய்திகள்

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் : 8 இந்தியர்கள் கைது; 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு + "||" + Hundreds of Indian students face jail, deportation in US college scam

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் : 8 இந்தியர்கள் கைது; 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் : 8 இந்தியர்கள் கைது; 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு
அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் நடத்திய 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் . 600 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
வாஷிங்டன்,

மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் கைதாகவோ, நாடு கடத்தப்படவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் பயணிப்போர், அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்கள் கல்வி தொடர்பான தொழில்துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பர்மிங்டன் ((Farmington)) என்ற பெயரில் போலியாக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600-க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து  அவர்களுக்கு விசாவும், பணி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு போலியான பல்கலைக்கழகத்தில் பயில்வதாகக் கூறப்படும் 600 பேர்  சிறை செல்லலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்
இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அனுமதி வழங்கி உள்ளது.
2. அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல் ; சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை
அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஒப்புதல். ஆனால் எல்லை சுவர் எழுப்புவதில் சமரசம் இல்லை என கூறி உள்ளார்.
3. டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு
டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் என்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் போலி பதிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
4. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது
அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.