இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்


இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர்  பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்
x
தினத்தந்தி 7 Feb 2019 6:25 AM GMT (Updated: 7 Feb 2019 7:34 AM GMT)

இந்தியாவுடன் 190 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அனுமதி வழங்கி உள்ளது.

வாஷிங்டன் 

இந்தியாவுடனான விற்பனைக்கு தேவையான சான்றிதழை வழங்க அமெரிக்க பாதுகாப்புத்துறை (பாதுகாப்பு கூட்டுறவு நிறுவனம்) அமெரிக்க வெளியுறவுத்துறை  கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க செனட்டின் ஒப்புதலுக்குப் பிறகு, ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முடிந்து  பின்னர் விற்பனை முடிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின்  பிரதான ஒப்பந்தக்காரர் அமெரிக்கா  ஓக்லஹோமா சிட்டி போயிங் கம்பெனியாகும்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புதுறை  கூட்டுறவு நிறுவனம் கூறி உள்ளதாவது:-

இந்திய அரசு கேட்டு கொண்டபடி நவீன தற்பாதுகாப்புடைய
  AN / AAQ 24 (V) N பெரிய விமானங்கள், ALQ-211 (V) 8 மேம்பட்ட ஒருங்கிணைந்த தற்காப்பு மின்னணு போர் சூட் (AIDEWS), போயிங் -777 விமானம் மற்றும்  விமானத்தை பாதுகாக்கும் அமைப்பு  AN / ALE-47  முறை (சிஎம்டிஎஸ்). வாங்குகிறது.

"முன்மொழியப்பட்ட இந்த விற்பனை அமெரிக்காவின் இந்திய  உறவை வலுப்படுத்த உதவுவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பை ஆதரிக்கிறது"  மற்றும் "அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கியமான சக்தியாகவும், அமைதி மற்றும் இந்திய-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது உதவுகிறது என கூறி உள்ளது.

Next Story