உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
அமெரிக்க ராணுவ மந்திரி (பொறுப்பு) பட்ரீக் சனாகான் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார்.
* அமெரிக்க ராணுவ மந்திரி (பொறுப்பு) பட்ரீக் சனாகான் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு அவர் அமெரிக்க படை வீரர்களை சந்தித்து பேசினார். அத்துடன் ஆப்கான் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

* மங்கோலியா நாட்டில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் பலியாகினர். 11 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

* ரஷிய நாடாளுமன்றத்தில் வெளியுறவு விவகாரத்துறை குழுவின் தலைவராக உள்ள கோன்ஸ்டான்டின் கேசாசெவ், ரஷியாவுக்கான வடகொரிய தூதர் கிம் ஹியான் ஜோங்கை சந்தித்து பேசினார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின் பிங்கும் அடுத்த மாதம் (மார்ச்) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* சிலி நாட்டில் இடை விடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 2000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.