உலக செய்திகள்

தாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள் + "||" + Take the baby from the mother's womb Treatment Doctors again in the womb

தாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள்

தாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள்
இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை கருப்பையிலிருந்து வெளியில் எடுத்த மருத்துவர்கள், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் உள்ளே வைத்து தைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில்  செவிலியராக பணிபுரிந்து வரும் பெத்தான் சிம்சன் (26) என்கிற தாய், 20 வார கர்ப்பிணியாக இருக்கும் போது, செல்ம்ஸ்போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரூம்பீல்ட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது சாதாரணமாக குழந்தைகளுக்கு இருப்பதை விட தலை இருக்கும் நிலை மாறி இருந்தது.

பின்னர் மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது, குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சியில் குறை இருப்பதை கண்டறிந்துள்ளனர். கருவிற்குள் இருக்கும்போதே குழந்தைக்கு சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றாலும் கூட, தற்போது சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், குழந்தை பிறந்த உடனே அது நடக்கும் திறனை பாதிக்கும் என்பதை பற்றி மருத்துவர்கள் விளக்கி கூறியுள்ளனர்.

இதனை பற்றி நன்கு யோசித்த பெத்தான் சிம்சன் மற்றும் அவருடைய கணவர் கியுரோன் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து பெல்ஜியத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த அறுவை சிகிச்சையானது லண்டன் மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்டது. பெல்ஜியம் மருத்துவர்களுடன் இணைந்து லண்டன் மருத்துவர்களும் இதில் ஈடுபட்டனர்.

குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் பின்னர் மீண்டும் குழந்தையை கர்பப்பையிலே வைத்து தைத்தனர். இந்த அறுவை சிகிச்சையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு வல்லுநர்கள், லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனை வல்லுநர்கள் முக்கிய பங்கு ஆற்றினர்.

இந்த சம்பவமானது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், துணிவுடன் அறுவை சிகிச்சைக்கு தயாரான தம்பதியினருக்கு தங்களுடைய நன்றியினை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா
ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.
2. நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சாரத் திருவிழா தொடங்கியது
நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்ட ஆசிய கலாச்சாரத் திருவிழா சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
3. 6 நாட்கள் 6 முறை பின் பற்றவேண்டும் ; உலக முன்னணி பணக்காரரின் சர்ச்சை பேச்சு
6 நாட்கள் 6 முறை பின் பற்றவேண்டும் எனக்கூறி உலக முன்னணி பணக்காரர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
4. விமானத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியருக்கு 12 மாதம் சிறை
விமானத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய இளைஞருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
5. ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி
ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டு கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.