உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the World

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் சிபாஹதுல்லா முஜாதிதி நேற்று முன்தினம் இரவு காலமானார்.

* ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணம் தாஸ்த்-இ-குவாலா மாவட்டத்தில் ஒரு வீட்டின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டை வீசியதில் 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* பெரு நாட்டின் தெற்கு பிராந்திய பகுதிகள் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. நிலச்சரிவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

* ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் சிபாஹதுல்லா முஜாதிதி நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 93.

* பிரேசிலை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் ரிக்கார்டோ போசாட்(வயது 66) ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

* வியட்நாமில் விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான 2-வது சந்திப்பு வெற்றிகரமாக நடக்கும் என சீனா மற்றும் ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளன.

* மலேசியாவில் வெளிநாட்டினரை குறிவைத்து கடத்தி பணம் பறித்து வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர்களின் பிடியில் இருந்து வங்காளதேச நாட்டுக்காரர் ஒருவரை பத்திரமாக மீட்டனர்.

* அமெரிக்க ராணுவ மந்திரி (பொறுப்பு) பட்ரீக் சனாகான் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஈராக்குக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

* பிரதமர் தெரசா மே வரும் கோடை காலத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என நம்புவதாக இங்கிலாந்து எம்.பி.க்கள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலீபான் தளபதி பலி
ஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதலில் தலீபான் தளபதி பலியானார்.
2. ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலியாயினர்.
3. ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 15 தலீபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 தலீபான்கள் பலியாயினர்.
4. உலகைச்சுற்றி....
ஆப்கானிஸ்தானின் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.
5. ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...