உலக செய்திகள்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 1,112 பேரை கைது செய்ய உத்தரவு + "||" + Turkish coup attempt: The order to arrest 1,112 people

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 1,112 பேரை கைது செய்ய உத்தரவு

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 1,112 பேரை கைது செய்ய உத்தரவு
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட 1,112 பேரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
அங்காரா,

துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.

அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல்
டெல்லியில் 1,965 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
2. துருக்கி: இஸ்தான்புல் நகரத்தில் எட்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 15 பேர் உயிரிழப்பு
துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் எட்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
3. துருக்கியில் புரட்சிக்கு முயன்ற 2 ஆயிரம் பேருக்கு வாழ்நாள் சிறை
துருக்கியில் புரட்சிக்கு முயன்ற 2 ஆயிரம் பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4. உலகைச்சுற்றி...
துருக்கியில் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது.
5. ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,103 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,103 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...