புல்வமா தாக்குதல்: ரஷ்யா கடும் கண்டனம்

புல்வமா தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புல்வமா தாக்குதல்: ரஷ்யா கடும் கண்டனம்
Published on

மாஸ்கோ,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 45 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதின் கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூர குற்றத்திற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com