உலகைச்சுற்றி...

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்து வருகிறது.
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உடல் எடை கடந்த ஆண்டை விட தற்போது 2 கிலோ அதிகரித்துள்ளதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* போலந்தில் நடந்து வரும் மத்திய கிழக்கு பாதுகாப்பு மாநாட்டுக்கு இடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மற்றும் தென்கொரிய வெளியுறவு மந்திரி காங் கியாங் வா ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். வடகொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு குறித்து இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
* கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
* அமெரிக்க ராணுவம் வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கியூபா குற்றம் சாட்டி உள்ளது.
* ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
* எகிப்தில் அதிபர் பதவிக்கான காலவரம்பை நீட்டிக்கும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் தற்போதைய அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி 2034-ம் ஆண்டு வரை அதிபராக நீட்டிப்பார்.

Related Tags :
Next Story