உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார்.

*  சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

*  அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தியது மூலம் டிரம்ப் ஒரு கடுமையான ஜனாதிபதி என்பது நிரூபணமாகி இருப்பதாக கூறும் ஜனநாயக கட்சியினர், விரைவில் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரவோம் எனவும் சூளுரைத்துள்ளனர்.


*  அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு தேர்தலிலும் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு போட்டியிட்டு, ஹிலாரி கிளிண்டனிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

*  நைஜீரியாவின் ஷாம்பாரா மாகாணத்தை சேர்ந்த கொள்ளையர்கள் சிலர் 80 பேரை கடத்தி சென்று தும்புராம் வனப்பகுதியில் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். நைஜீரிய ராணுவவீரர்கள் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி 80 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

*  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த வாலிபர், சீக்கியர் ஒருவரின் முகத்தில் கொதிக்கும் காபியை ஊற்றியதோடு, அவரை சரமாரியாக தாக்கினார். இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
சவுதி அரேபியாவில் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
2. சவுதி அரேபிய மன்னரை அவமதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
சவுதி அரேபிய மன்னருடனான சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மன்னரை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3. சவுதி அரேபியா சிறையில் இருந்து 850 இந்தியர்கள் விடுதலை - பிரதமர் மோடி தகவல்
தனது கோரிக்கையை ஏற்று சவுதி அரேபியா சிறையில் இருந்து 850 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi
4. உலகைச் சுற்றி...
சவுதி அரேபியாவில் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறி பெண் உரிமை ஆர்வலர்கள் 11 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
5. இந்தியா - சவுதி இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.