உலகைச் சுற்றி...

ஜெர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற அதிவேக ரெயில் ஒன்று பசெல் நகரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
* மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகர் பகுதியான இஸ்டாபலாப்பா என்ற இடத்தில் திறந்தவெளியில் விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
* வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அங்கு பயணம் மேற்கொண்டு உள்ள ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 5 எம்.பி.க்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.
* ஈரானில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டிய சிஸ்டன்-பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்று கொண்டிருந்த ஈரான் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதில் 27 வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக தங்கள் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து ஈரான் அரசு தனது கண்டனத்தை பதிவு செய்தது.
* ஜெர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற அதிவேக ரெயில் ஒன்று பசெல் நகரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் அந்த ரெயிலில் பயணம் செய்த 240 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
* பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் 9 பாலஸ்தீனர்களும், இஸ்ரேல் பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் காயம் அடைந்தனர்.
* ஏமன் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் முக்கிய துறைமுக நகரான ஹூடைடாவில் இருந்து தங்கள் படைவீரர்களை திரும்ப பெற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story






