அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு


அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2019 9:10 AM IST (Updated: 19 Feb 2019 9:10 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளன.

சான் பிரான்ஸிஸ்கோ,

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. 

ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக தற்போது நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உள்ளார். நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. 

இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள 16 மாகாணங்கள், கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன. டிரம்பின் அறிவிப்பு சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

1 More update

Next Story