உலக செய்திகள்

பாகிஸ்தானில் சேமிப்பு தீர்ந்தது தக்காளி கிலோ ரூ.250 + "||" + Shortage drives up tomato prices in Rawalpindi, Islamabad

பாகிஸ்தானில் சேமிப்பு தீர்ந்தது தக்காளி கிலோ ரூ.250

பாகிஸ்தானில் சேமிப்பு தீர்ந்தது தக்காளி கிலோ ரூ.250
இந்திய விவசாயிகள் நடவடிக்கையால் பாகிஸ்தானில் தக்காளி சேமிப்பு தீர்ந்தது. இதனால் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனையாகிறது.
கராச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இருப்பது தெரியவந்தது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தானுக்குள் செல்லும் ராவி, சட்லெட்ஜ், பியாஸ் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளி விலை கிலோ ரூ. 250 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தினமும் 3 ஆயிரம் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதை விட இந்தியாவிடம் இருந்தே பாகிஸ்தான் குறைந்த விலையில் தக்காளியை பெற்று வந்தது. தற்போது காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ. 160-க்கும், சிவப்பு மிளகாய் ரூ. 300-க்கும், இஞ்சி ரூ. 150-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும், வெங்காயம் ரூ. 90-க்கும், கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ. 110-க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவு
கடந்த ஆண்டில் பேஸ்புக் நிறுவன செயல் அதிகாரி, மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக மட்டும் 156 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2. குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை
குரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
3. ஒரு தாய் இரண்டு தந்தை இது எப்படி சாத்தியமானது?
அலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர். அதுதான் ஆச்சரியம்.
4. நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்
சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25-ந் தேதிக்குள் அணுக நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.
5. பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனின் காதல் கதை: 100 பாதுகாப்பு வீரர்களுடன் சென்று காதலை தெரிவித்தார்
மெக்சிகோ நாட்டின் பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனான எல் சாப்போ தமது காதல் மனைவியிடம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்தியது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.