பேய் பிடித்திருக்கிறது என கூறி பெண்ணை சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது

பாகிஸ்தானில் பேய் பிடித்திருக்கிறது என கூறி பெண் ஒருவரை பல வாரங்களாக சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
பேய் பிடித்திருக்கிறது என கூறி பெண்ணை சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சாஹிவால் நகரில் வசித்து வரும் பெண் ஒருவரை பேய் பிடித்திருக்கிறது என கூறி அவரது கணவர் உள்பட குடும்பத்தினர் பல வாரங்களாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அண்டை வீட்டுக்காரர்கள் போலீசில் அளித்த புகாரை அடுத்து பெண் மீட்கப்பட்டார். இதுபற்றி தொலைக்காட்சியில் படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. அதில், பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அறை ஒன்றின் தரையில் அமர்ந்துள்ளார்.

அவரது கால்கள் சங்கிலியால் சுவருடன் பிணைக்கப்பட்டு உள்ளன. அவரை மீட்டபின் போலீசாரிடம், எனது கணவர் மற்றும் உறவினர்கள் என்னை கட்டி வைத்து அடித்து உதைத்து வந்தனர் என அப்பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com