உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 26 March 2019 12:23 AM GMT (Updated: 26 March 2019 12:23 AM GMT)

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து நேரிட்டதில் பலியானோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.


* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டின் உயர்மட்ட விசாரணைக்குழுவான ராயல் கமிஷன் விசாரணை நடத்த பிரதமர் ஜெசிந்தா உத்தரவிட்டார்.

* மொனாக்கோ சென்ற சீன அதிபர் ஜின்பிங், அவரது மனைவி பெங் லீயுவானுக்கு அந்நாட்டு இளவரசர் 2-ம் ஆல்பர்ட் மற்றும் இளவரசி சாரலீன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்த ஹோண்டுராஸ் அதிபர் உர்லாண்டோ ஹெர்ணான்டஸ் அங்கு தங்கள் நாட்டின் வர்த்தக அலுவலகத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

* பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து வீசப்பட்ட ராக்கெட் குண்டு ஒன்று இஸ்ரேலின் டெல்-அவிவ் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

* வியட்நாமில் காச நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் காச நோயினால் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாகவும், 12 ஆயிரம் பேர் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

* சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து நேரிட்டதில் பலியானோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.

Next Story