காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தால் மசூத் அசாருக்கு தடை விதிக்க அனுமதியுங்கள் : சீனாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை


காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தால் மசூத் அசாருக்கு தடை விதிக்க அனுமதியுங்கள் : சீனாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை
x
தினத்தந்தி 28 March 2019 9:41 AM GMT (Updated: 28 March 2019 9:41 AM GMT)

காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தால் மசூத் அசாருக்கு தடை விதிக்க அனுமதியுங்கள் என சீனாவை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடுத்து வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னரும் பாதுகாப்பு கவுன்சிலில் தடையை சீனா ஏற்படுத்தியது. இப்போது அவனை கருப்பு பட்டியலில் இணைக்க அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளுடன் கைக்கோர்க்கிறது. 

மசூத் அசார் விவகாரத்தில் சீனா பல்வேறு நிலைகளில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்தியாவின் நடவடிக்கையில் இருந்து பாகிஸ்தானை பாதுகாக்கும் சீனா, பயங்கரவாதம் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படுகிறது என அமெரிக்கா கண்டித்துள்ளது. இந்நிலையில் இந்தியா எல்லையில் ராணுவ நடவடிக்கையை தவிர்க்க மற்றும் காஷ்மீர் உள்பட பல்வேறு விஷயங்களில் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தால், மசூத் அசாருக்கு தடைவிதிக்க அனுமதியுங்கள் என சீனாவிடம் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story