வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து -19 பேர் உயிரிழப்பு


வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து -19 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 March 2019 8:41 PM IST (Updated: 28 March 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

வங்காளதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டதில் 19 பேர் உயிரிழந்தனர்.

டாக்காவின் பானானி பகுதியில் 22 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் பல்வேறு துணிக்கடைகள், இணைய சேவை மையங்கள் செயல்பட்டுள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த இரண்டு கட்டிடங்களுக்கும் பரவியுள்ளது. 8-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11-வது மாடி வரையில் சென்றுள்ளது. அந்நாட்டு தீயணைப்பு படைகள், ராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டது. தீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டிடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ அணைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடக்கிறது என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story