சமூக வலைத்தளத்தில் தேர்தல் பற்றி போலி செய்தி பதிவிட்ட 9 பேர் கைது


சமூக வலைத்தளத்தில் தேர்தல் பற்றி போலி செய்தி பதிவிட்ட 9 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2019 9:00 PM GMT (Updated: 29 March 2019 8:51 PM GMT)

சமூக வலைத்தளத்தில் தேர்தல் பற்றி போலி செய்தி பதிவிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாங்காக்,

ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்து நாட்டில் கடந்த 24-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டு ஓட்டு போட்டனர். ராணுவத்தின் ஆதரவை பெற்றுள்ள பாலங் பிரச்சா ரத் கட்சி முன்னணியில் உள்ளதாக தேர்தல் கமிஷன் முதலில் கூறினாலும், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால், மே மாதம் வரை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், தேர்தல் கமிஷனர்கள் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர், ஓட்டு எண்ணிக்கையில் 6 லட்சம் போலி வாக்குச்சீட்டுகளை அவர்கள் கலந்துவிட்டனர் என போலியான செய்திகளை சிலர் பதிவிட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கள் மீது கணினி குற்ற சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Next Story