ஜெர்மனியில் இந்தியர் குத்திக்கொலை


ஜெர்மனியில் இந்தியர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 30 March 2019 10:45 PM GMT (Updated: 30 March 2019 7:58 PM GMT)

ஜெர்மனியில் இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

முனிச்,

இந்தியாவை சேர்ந்த தம்பதிகள் பிரசாந்த், ஸ்மிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜெர்மனி நாட்டின் முனிச் நகர் அருகே தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நியூ கினியா தீவை சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவர் பிரசாந்த் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவருடைய மனைவியையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பிரசாந்த் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஸ்மிதா படுகாயம் அடைந்தார். கத்தியால் குத்திய அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி அறிந்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரசாந்த் சகோதரரை உடனடியாக ஜெர்மனிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் பிரசாந்தின் இரு குழந்தைகளையும் பாதுகாக்க ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இது குறித்து சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கும் நான் காவலாளியாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Next Story