உலக செய்திகள்

ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர் + "||" + Hollywood romantic couple Anna-Skylor separated

ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்

ஹாலிவுட் காதல் ஜோடி அன்னா-ஸ்கைலர் பிரிந்தனர்
ஹாலிவுட் காதல் ஜோடியான அன்னா-ஸ்கைலர் ஆகியோர் பிரிந்தனர்.
வாஷிங்டன்,

ஹாலிவுட் நடிகை அன்னா கேம்ப் (வயது 36). இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் மைக்கேல் மோஸ்லேயை காதலித்து மணந்தார். 3 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். அதன்பின்னர் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2013-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.


இந்த நிலையில் அன்னா கேம்ப் புகழ்பெற்ற நகைச்சுவை படமான ‘பிட்ச் பெர்பெக்ட்’டில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஸ்கைலர் ஆஸ்டினை (31) காதலித்தார். இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். 2016-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். 3 ஆண்டுகள்தான் இந்த திருமணமும் நீடித்து இருக்கிறது.

இப்போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதை இருவரும் உறுதி செய்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், “ நாங்கள் பிரிந்து விட்டோம் என்பதை உறுதி செய்கிறோம். இருவரும் பரஸ்பரம் பேசி பிரிவது என முடிவு செய்தே பிரிந்திருக்கிறோம். எங்களது அந்தரங்கத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹாலிவுட்டில் சுருதிஹாசன்
ஹாலிவுட் தொடர் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளார்.