இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: போப் ஆண்டவர் கண்டனம்


இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: போப் ஆண்டவர் கண்டனம்
x
தினத்தந்தி 22 April 2019 1:26 AM IST (Updated: 22 April 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக போப் ஆண்டவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்தில் வழக்கம்போல் ஆசி வழங்கி உரையாற்றினார். அதன் நிறைவில், இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

பிரார்த்தனைக்காக கூடி இருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடனான எனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பலியான அனைவரையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story