உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 21 April 2019 10:00 PM GMT (Updated: 21 April 2019 8:19 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ஜூலை மாதம் 20-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் செப்டம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


* அமெரிக்கா, வியட்நாம் இடையிலான போரின் போது வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள காடுகளை அழித்து, அங்கு மறைந்து இருந்த எதிரிகளை கண்டுபிடிக்க அமெரிக்க படைகள் ‘ஆரஞ்சு’ ரசாயனத்தை தெளித்தனர். இதில் அங்கு உள்ள பியென் ஹவோ விமான நிலையம் பெரும் சேதம் அடைந்தது. போர் முடிந்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் ரூ.1,270 கோடி செலவு செய்து அந்த விமான நிலையத்தை புனரமைக்கும் பணியை அமெரிக்கா தொடங்கி உள்ளது.

* இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு நெருப்பு குழம்பை உமிழ்ந்து வருகிறது. இதில் இருந்து வெளியேறும் சாம்பல், எரிமலையை சுற்றி உள்ள நகரங்களில் மழை போல் பொழிகிறது. மக்கள் அனைவரும் முககவசம் அணிந்துகொண்டு பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* ஆப்கானிஸ்தானில் ஜூலை மாதம் 20-ந் தேதி நடைபெற இருந்த தேர்தல் செப்டம்பர் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிபர் அஷ்ரப் கனியின் பதவி காலம் தேர்தல் வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.

* காங்கோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கிவு ஏரியில் கடந்த 15-ந் தேதி பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 150 பேர் மாயமான நிலையில், நேற்று முன்தினம் 13 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை என 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 135 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Next Story