இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது


இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது
x
தினத்தந்தி 22 April 2019 8:10 AM IST (Updated: 22 April 2019 9:31 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 215 பேர் பலியாகினர். 

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

 கொழும்புவில் உள்ள இரண்டு இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
1 More update

Next Story