இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை


இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 April 2019 8:42 AM GMT (Updated: 22 April 2019 8:42 AM GMT)

இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 290 பேர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்திய தூதரகம், தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

"பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் சாத்தியமான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டங்களை தொடர்ந்து செய்கின்றன. பயங்கரவாத தாக்குதல்கள் அறிவிக்கப்பட்டோ, எச்சரிக்கப்படாமலோ நடத்தப்படலாம், சுற்றுலா தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம்” என அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை செய்தியில், ஓட்டல்கள், கிளப்கள், உணவகங்கள், வழிபாட்டு இடங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதிகளின் இலக்காகலாம். அமெரிக்கர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story