இலங்கைக்கு விடுமுறைக்கு வந்து குடும்பத்தை இழந்த இங்கிலாந்து தொழில் அதிபர்


இலங்கைக்கு விடுமுறைக்கு வந்து குடும்பத்தை இழந்த இங்கிலாந்து தொழில் அதிபர்
x
தினத்தந்தி 23 April 2019 10:30 PM GMT (Updated: 23 April 2019 8:18 PM GMT)

இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கொழும்பு,

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இங்கிலாந்தை சேர்ந்த 8 பேர் பலியானார்கள். அவர்களில், சட்ட நிறுவனம் ஒன்றின் பங்குதாரரான பென் நிக்கல்சன் என்பவரின் மனைவி அனிதா (வயது 42), மகன் அலெக்ஸ் (14), மகள் அன்னபெல் (11) ஆகியோரும் அடங்குவர். இவர்கள் சிங்கப்பூரில் வசித்து வந்தனர். விடுமுறையை கழிப்பதற்காக, இலங்கைக்கு வந்தனர்.

தி ஷாங்கிரி லா ஓட்டலில் தங்கினர். அங்குள்ள உணவு விடுதியில் அமர்ந்து இருந்தபோதுதான் குண்டு வெடித்தது. இதில், பென் நிக்கல்சன் உயிர் தப்பினாலும், மனைவி, மகன், மகள் ஆகியோரை பறிகொடுத்து விட்டார். அவர்களுக்கு நேற்று அவர் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். தன் மனைவி அற்புதமானவர் என்றும், பிள்ளைகள் இருவரும் வியப்பூட்டக்கூடியவர்கள் என்றும் பென் நிக்கல்சன் கூறினார். 3 பேரும் எந்த வேதனையும் இல்லாமல், கடவுளின் கருணையால், உடனடியாக இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோல், முன்னாள் தீயணைப்பு வீரர் பில் ஹரூப், அவருடைய மனைவி சல்லி பிராட்லி ஆகியோர் உயிரிழந்ததற்கு அவர்களுடைய நண்பர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Next Story