அமெரிக்காவில் இந்தியருக்கு 5 ஆண்டு சிறை


அமெரிக்காவில் இந்தியருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 24 April 2019 9:00 PM GMT (Updated: 24 April 2019 8:26 PM GMT)

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய உதவிய இந்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர் யத்விந்தர் சிங் சந்து (வயது 61). இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா உள்பட பிறநாடுகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய உதவி செய்தது தெரியவந்தது.

இப்படி அவர் பலரை சட்டத்துக்கு புறம்பான முறையில் அமெரிக்காவுக்குள் கடத்தியபோது, ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒருவர் பலியானது மூலம் அவரது சதி வேலை அம்பலமானது. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து வந்தது.

விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். யத்விந்தர் சிங் சந்து மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story