சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
x
தினத்தந்தி 24 April 2019 9:30 PM GMT (Updated: 24 April 2019 8:29 PM GMT)

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ரியாத்,

சவுதி அரேபியாவில் கொலை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பாதுகாப்புபடை வீரர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது, பயங்கரவாத அமைப்பை உருவாக்கி நாட்டில் பயங்கரவாத கொள்கையை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 37 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரே நாளில் அந்த 37 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் தலை துண்டிக் கப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் அதிக குற்றம் செய்ததாக கருதப்படும் 2 பேரின் தலை இல்லாத உடல்கள், தலைநகர் ரியாத்தில் மக்கள் பார்வைக்காக கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டன.

Next Story