உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 28 April 2019 10:30 PM GMT (Updated: 28 April 2019 7:35 PM GMT)

சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து பேசினார்.

* இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து, அங்கு வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

* ராணுவ ஆட்சி நடைபெறும் சூடானில் இடைக்கால ராணுவ சபையின் பிரதிநிதிகள் மற்றும் மக்களாட்சி கோரி போராட்டம் நடத்தி வரும் மக்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி மக்களும், ராணுவமும் இணைந்து ஆட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

* சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்த தலைவர்கள் இருவரும் உறுதி பூண்டனர்.

* ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணம் குவாய்சர் நகரில் பாதுகாப்புபடை வீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் 4 பாதுகாப்பு படைவீரர்களும் அப்பாவி மக்கள் 2 பேரும் பலியாகினர். அதே சமயம் தலீபான் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர்.


Next Story