உலக செய்திகள்

‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண் - மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி + "||" + The 'Avengers' film watch the young girl crying - Suffocation Hospital sanction

‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண் - மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண் - மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்து இளம் பெண் ஒருவர் தேம்பி, தேம்பி அழுத வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீஜிங்,

சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.


இந்த நிலையில், சீனாவின் நிங்போ நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சியாலி (வயது 21) இந்த திரைப்படத்தை அங்குள்ள ஒரு திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தார். படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்டு கண் கலங்கிய அவர், நேரம் செல்லச் செல்ல தேம்பி, தேம்பி அழுதார்.

இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, செயற்கை சுவாச உதவியோடு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதிகமாக அழுததால் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
2. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
3. வசூலில் சாதனை படைத்து வரும் பி.எம். நரேந்திரமோடி படம்
திரையிடப்பட்டு சில நாட்களே ஆன பி.எம். நரேந்திரமோடி என்ற வாழ்க்கை வரலாற்று இந்தி படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
4. ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா
பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.
5. சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி
சீனாவில் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.