ஜூன் மாதத்தில் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன்: டொனால்டு டிரம்ப்


ஜூன் மாதத்தில் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன்: டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 14 May 2019 5:07 AM GMT (Updated: 14 May 2019 5:07 AM GMT)

ஜூன் மாதத்தில் ரஷ்ய தலைவர் புதினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

ஜப்பானில் அடுத்த (ஜூன்) மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு இடையே,  சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்திக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். 

ஜி 20 மாநாட்டின் போது, மே 23 ஆம் தேதி தேர்தலுக்கு பிறகு, பதவியேற்க இருக்கும் இந்திய பிரதமரையும் டிரம்ப் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.  கடந்த ஆண்டு நவம்பரில் அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் போது, ஜி ஜிங்பிங் - டொனால்டு டிரம்ப் எவ்வளவு முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டதோ, அதேபோல நிகழாண்டிலும் இந்த சந்திப்பு உலக அளவில், அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் முற்றிவரும் இந்த சூழலில், இரு தலைவர்களின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், “ நீங்கள் அறிந்து இருந்த படியே, அடுத்த (ஜூன்) மாதம் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபரையும், ரஷ்ய தலைவரையும் சந்திக்க உள்ளேன்.  இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்று நான் கருதுகிறேன்” என்றார். 

Next Story